Thursday, April 19, 2012

Chennai Super Kings ஒரு அலசல்


Chennai Super Kings ஒரு அலசல்

வணக்கங்களுடன் அரட்டை அருண்,
எனக்கு மிகவும் பிடித்த கிரிகெட்டை பற்றியே எனது முதல் பதிவை தொடங்குகிறேன்.

இருப்பதிலேயே மிகவும் பலவீனமான பௌலிங்கை  கொண்டுள்ள சென்னை அணி, கேப்டன் தோனியின் வழிநடத்துதலில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. சீசன் தொடங்கியவுடன் பெரிய வெற்றிகளை பதிவு செய்யாமல் இருக்கும் சென்னை அணி லீக் சுற்றுகளின் முடிவில் முதல் நான்கு இடங்களுக்குள் இருப்பது ஒவ்வொரு முறையும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.  IPL முதல் சீசனில் இருந்து கடந்த சீசன் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.




TEAM ACHIEVEMENTS
IPL 2008 - 2nd position
IPL 2009 - அரை இறுதி
IPL 2010 - சாம்பியன்
IPL 2011 - சாம்பியன்


KEY PLAYERS
ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை ஜொலிக்கும் முரளி விஜய் போன்ற வீரர்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அணியின் பங்களிப்பு சிறப்பானதாக இருக்க காரணம் எப்போதும் ஜொலிக்கும் சில முக்கிய வீரர்களே.
 தோணி - இந்திய அணிக்கு மட்டுமல்ல சென்னை அணிக்கும் சிறப்பான கேப்டனாக விளங்குபவர், சேசிங்கில் வல்லவர், தன்னோடு சேர்ந்து ரன் ஓடும் வீரர்களை ஓடவைத்தே சாவடிப்பவர், மிஸ்டர் கூல் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
ரெய்னா - ஒட்டு மொத்த சீசனிலும் சேர்த்து அதிக ரன் எடுத்தவர், மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படுபவர், சிறந்த பீல்டர், அவ்வபோது பந்து வீசி விக்கட்டையும் எடுத்து அதிர்ச்சி அளிப்பவர். மொத்தத்தில் சகலகலா வல்லவர்.
மைக் ஹஸ்ஸி - எல்லா ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை என்றாலும் தான் விளையாடும் ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குபவர், ரன் ரேட்டை உயர்த்துவதில் மிகவும் வல்லவர், மிஸ்டர் கிரிக்கெட் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுபவர்
மோர்கல் - பவுலரான இவர் பல சமயம் தனது அதிரடியான பேட்டிங்கால் வெற்றியை எதிரனியிடமிருந்து பறிக்கக்கூடிய வல்லமை படைத்தவர், பல சமயம் பந்தை மைதானத்தைவிட்டு வெளியே அனுப்பியவர்

இவர்கள் தவிர அஸ்வின், பிராவோ, மற்றும் இந்த சீசனில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரவிந்தர ஜெடஜே சேர்ந்து இருக்கிறார் என்பது கூடுதல் பலம்.
இவ்வித அருமை பெருமைகளை கொண்ட சென்னை அணி இந்த முறையும் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்குமா என்பதே பலரின் ஆவலாக உள்ளது
Common CSK ---CSK க்கு விசில் போடு



கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன